இராணுவ வீரர்களுக்கான தூபியை சேதப்படுத்திய நபர் - மூன்றாவது முறை கைது!!
21 கார்த்திகை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 203
ஒரே வாரத்தில் மூன்று தடவைகள் tombe du Soldat inconnu இனை சேதப்படுத்திய ஒருவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Arc de Triomphe இல் அமைந்துள்ள 'பெயர் தெரியாத இராணுவ வீரர்களுக்கான' நினைவுத்தூபியை 23 வயதுடைய ஒருவர் தொடர்ச்சியாக சேதப்படுத்தியுள்ளார். கடந்த நவம்பர் 12 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இரு நாட்களின் பின்னர், நவம்பர் 14 அன்று அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் அவர் தூபியின் மீது ஏறி அமர்ந்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்டிருந்தார். சிலமணிநேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதை அடுத்து, நவம்பர் 19 ஆம் திகதி மீண்டும் அவர் தூபி மீது ஏறி அமர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவர் உளநல சிகிச்சை பெற்று வருபவர் எனவும், அவரது மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் 23 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan