Paristamil Navigation Paristamil advert login

"பிள்ளைகளை இழக்கத் தயாராக இருங்கள்": படைத்தளபதியின் பேச்சால் சர்ச்சை!!

20 கார்த்திகை 2025 வியாழன் 19:31 | பார்வைகள் : 649


பிரான்ஸ் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பாபியன் மான்டன் (Fabien Mandon) , நவம்பர் 18 அன்று நகர மேயர்களின் முன்னிலையில், நாடு ஆயுத மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், "பிரான்ஸ் தன் பிள்ளைகளை இழக்க வேண்டிய நிலையை ஏற்கத் தயாராக இல்லை என்றால் அது ஆபத்தாகும்" என கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சில உள்ளூர் தலைவர்கள் இதை தேவையற்ற அச்சுறுத்தல் என கண்டித்தாலும், சிலர் இதை எதிர்கால ஆபத்துகளுக்கான முக்கியமான எச்சரிக்கை என ஆதரித்தும் உள்ளனர். இதற்கிடையில், இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்திலும் கடுமையான விவாதத்தை தூண்டியுள்ளது. 

இடதுசாரிகள் ஜெனரலின் இந்த உரை அரசியல் நோக்கத்துடன் இருப்பதாக விமர்சித்துள்ளனர், ஆனால் மத்திய அணிக் கட்சிகள் படைத் தளபதியின் பங்கு ஆபத்துகளை முன்கூட்டியே எச்சரிப்பதாகும் என அவர் கூறியதை நியாயப்படுத்தியுள்ளனர். ராஸ்செம்பிள்மோ நஷியோனல் கட்சியும் இந்தக் கருத்தைத் தவறானது எனக் கண்டித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்