Paristamil Navigation Paristamil advert login

சவுதி அரேபியாவில் பேருந்துஒன்று டீசல் தாங்கியுடன் மோதி விபத்து- 42 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவில் பேருந்துஒன்று டீசல் தாங்கியுடன் மோதி விபத்து- 42 இந்தியர்கள் பலி

17 கார்த்திகை 2025 திங்கள் 18:28 | பார்வைகள் : 245


சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முஃப்ரிஹாத் அருகே அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, ​​பேருந்து மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மோதலுக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

பலியானவர்களில் குறைந்தது 11 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்பட்ட போதும், அந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்