56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கௌரவிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலய்யா!
17 கார்த்திகை 2025 திங்கள் 15:54 | பார்வைகள் : 2160
கூலி' படத்தை அடுத்து தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்க வந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் முன்வந்த போது அதை தவிர்த்து விட்டார் ரஜினி.
இந்த நிலையில் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவரை கவுரவிக்க இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த பாராட்டு விழா வருகிற 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதேபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்த விழாவில் கவரவிக்கப்பட உள்ளார்.
அதாவது, ரஜினிகாந்த் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் என்றால் பாலகிருஷ்ணாவோ 1974ம் ஆண்டிலேயே 'தத்தம்மா காலா' என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டார். அந்த வகையில் ரஜினியை போலவே பாலகிருஷ்ணாவும் தெலுங்கு சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் நவம்பர் 28ம் தேதி கோவாவில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan