Paristamil Navigation Paristamil advert login

BFMTV தொலைகாட்சி நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - நேரலை பாதிப்பு!!

BFMTV தொலைகாட்சி நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! - நேரலை பாதிப்பு!!

15 கார்த்திகை 2025 சனி 19:38 | பார்வைகள் : 255


பிரான்சில் மிகவும் புகழ்பெற்ற BFMTV தொலைக்காட்சி நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதை அடுத்து நேரலை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.

இன்று நவம்பர் 15, சனிக்கிழமை பரிசில் உள்ள BFMTV கலையகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வருகை தந்து கலையகத்தை சோதனையிட்டனர். வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நேரலை நிகழ்வுகள் இதனால் பாதிக்கப்பட்டன.

பிற்பகல் 3.19 மணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலை 5.50 மணிக்கு நிகழ்ச்சிகள் வழமைக்கு திரும்பின.  நிகழ்ச்சி தடைப்பட்டமைக்கு BFMTV மன்னிப்பு கோரியது.

வர்த்தக‌ விளம்பரங்கள்