Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் பாடசாலைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்காவில் பாடசாலைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

14 கார்த்திகை 2025 வெள்ளி 19:26 | பார்வைகள் : 3212


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது.

 

அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

 

இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது.

 

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் புரளி என தெரியவந்தது.

 

இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பங்களால் புல்லர்டன் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.

வர்த்தக‌ விளம்பரங்கள்