Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனுடன் சந்திப்பு! - பரிசுக்கு வருகை தருகிறார் செலன்ஸ்கி..!

மக்ரோனுடன் சந்திப்பு! - பரிசுக்கு வருகை தருகிறார் செலன்ஸ்கி..!

14 கார்த்திகை 2025 வெள்ளி 16:41 | பார்வைகள் : 351


யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி வரும் திங்கட்கிழமை பரிசுக்கு வருகை தர உள்ளார்.

"யுக்ரேனுக்கு பிரான்ஸ் வழங்கும் நீண்டகால ஆதரவை புதுப்பிக்கும் நோக்கோடு" இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. இருவரும் சந்தித்து உரையாடுவதோடு, ரஷ்யா-யுக்ரேனிய போர்நிறுத்தம் தொடர்பில் அமைக்கப்பட்ட அலுவலகம் (பிரான்ஸ், பிரித்தானியா இணைந்து உருவாக்கிய) force multinationale Ukraine அலுவலக தலைமைச் செயலகத்துக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.

இருவரும் முன்னதாக ஒக்டோபர் 24 ஆம் திகதி லண்டனில் வைத்து சந்தித்திருந்தனர். ரஷ்ய, யுக்ரேனிய யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து  செலன்ஸ்கி பிரான்சுக்கு வருகை தருவது இது ஒன்பதாவது முறையாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்