Paristamil Navigation Paristamil advert login

சீனாவின் உயர் தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கில் புதிய K-visa திட்டம்

சீனாவின் உயர் தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கில்  புதிய K-visa திட்டம்

11 கார்த்திகை 2025 செவ்வாய் 04:40 | பார்வைகள் : 232


சீன அரசு, உலகளாவிய தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய K-visa திட்டத்தை 2025 அக்டோபரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த K-விசா திட்டத்தின் முக்கிய அம்சம், வேலை வாய்ப்பு இல்லாமலேயே விண்ணப்பிக்க முடியும் என்பது தான்.

இது, சீனாவில் பல சதாப்த காலமாக நிலவிய திறன் குறைபாடு பிரச்சினையை மாற்றும் முயற்சியாகும்.

AI, semiconductor, robotics போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில், சீன அரசு விதிகளை தளர்த்தியுள்ளது.

சீனாவில் இளம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு குறைவாக இருந்தாலும், சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வெளிநாட்டு நிபுணர்கள் தேவை என அரசு வலியுறுத்துகிறது.

Intel-ல் பணியாற்றிய Fei Su, Altair-ல் பணியாற்றிய Ming Zhou போன்ற சீன வம்சாவளியினர் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு திரும்பி, கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

இந்த திட்டம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொழி தடைகள், Great Firewall censorship, மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் குறைந்த குடியிருப்பு சலுகைகள் போன்ற சவால்கள் சீனாவுக்கு முன்னேற்றத்தில் தடையாக இருக்கலாம்.

சீனாவின் இந்த புதிய முயற்சி, உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் போட்டியில் புதிய பரிமாணத்தை உருவாக்குகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்