Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கனடாவில் பரவும் H3N2 வைரஸ் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

கனடாவில் பரவும் H3N2 வைரஸ்  மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

10 கார்த்திகை 2025 திங்கள் 03:56 | பார்வைகள் : 793


கனடாவில் இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையான காய்ச்சல் பரவலுக்கான எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பரவும் H3N2 வகை influenza வைரஸ், இந்த ஆண்டுக்கான தடுப்பூசியுடன் பொருந்தாமல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய அரசு தரவுகள், நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 2 சதவீதம் காய்ச்சல் தொற்று இருப்பதை காட்டுகின்றன.

இது 5 சதவீதம் என்ற தொற்று பரவல் அளவை விட குறைவாக இருந்தாலும், சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

தென் அரைகோளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாதாரணத்தை விட அதிகமான காய்ச்சல் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் மட்டும் 4.1 லட்சம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான், பிரித்தானியா போன்ற நாடுகளில் சீக்கிரமாக பரவல் தொடங்கியுள்ளது.

H3N2 வைரஸ் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மேலும், இந்த வைரஸின் புதிய மாற்றங்கள், தடுப்பூசியுடன் பொருந்தாமல் இருக்கலாம் என B.C. நோய்தடுப்பு மையம் எச்சரிக்கிறது.


கனடாவில் தற்போது H1N1 மற்றும் H3N2 இரண்டும் சம அளவில் பரவுகின்றன. ஆனால் H3N2 அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Sinai மருத்துவ மையத்தின் டாக்டர் அலிசன் மெக்ஜியர், H3N2 பரவும் காலங்கள் “மிகவும் மோசமான” காய்ச்சல் பரவலாக இருக்கக்கூடும் என கூறியுள்ளார்.

தடுப்பூசி முழுமையாக பொருந்தவில்லை என்றாலும், குறிப்பாக முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்