இந்தியாவில் அறிமுகமான MINI Countryman SE All4 எலக்ட்ரிக் SUV
9 கார்த்திகை 2025 ஞாயிறு 17:34 | பார்வைகள் : 134
பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டு MINI, தனது முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் Countryman SE All4 மொடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காம்பாக்ட் எஸ்யூவி, ரூ.66.90 லட்சம் (ex-showroom) விலையில், முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக (CBU) கிடைக்கிறது.
MINI India டீலர்களிடம் முன்பதிவு பணியும் தொடங்கியுள்ளது.
இந்த மொடல் 66.45 kWh திறன் கொண்ட லித்தியம்-அயான் பேட்டரியால் இயக்கப்படுகிறது. WLTP தரப்படி இது 440 கிமீ வரை range கொண்டது.
130 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சுமாராக 29 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். 22 kW AC சார்ஜரில் முழு சார்ஜ் ஆக 3 மணி 45 நிமிடங்கள் ஆகும்.
Countryman SE All4, 313 ஹார்ஸ் பவர் மற்றும் 494 Nm டார்க் வழங்குகிறது. 0-100 கிமீ வேகத்தை 5.6 விநாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த கார், மணிக்கு 180 கிமீ உச்ச வேகத்தை எட்டக்கூடியது.
All-wheel drive அமைப்பு மற்றும் ‘Go-Kart’, ‘Green’, ‘Vivid’ என மூன்று டிரைவிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர, 360 டிகிரி camera கொண்ட Parking Assistant Plus, Cruise Control, Comfort Access போன்ற நவீன வசதிகளும் இதில் உள்ளன. பேட்டரிக்கு 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கிமீ வரை வாறண்டியும் வழங்கப்படுகிறது.
இந்த MINI மொடல், இந்திய மின்சார வாகன சந்தையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan