Paristamil Navigation Paristamil advert login

கமல் & அஜித் கூட்டணியில் லோகேஷ் கனகராஜ்?

கமல் & அஜித் கூட்டணியில் லோகேஷ் கனகராஜ்?

9 கார்த்திகை 2025 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 223


குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற இயக்குனர் லோகேஷ் அதே வேகத்தில் இப்போது சறுக்கியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தாக்குதல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்ரோல்களுக்கு உள்ளாகும் அளவுக்கு சென்றது விமர்சனம்.

இதன் காரணமாக ரஜினி- கமல் இணையும் படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளதாக சொலப்படுகிறது. அதனால் அவர் கைதி 2 படத்தைதான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கைதி 2 பற்றியும் நம்பிக்கை அளிக்கும் விதமாக செய்திகள் வெளியாகவில்லை. அந்த படமும் தற்போது தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

இந்நிலையில் அவர் அஜித்தின் 65 ஆவது படத்தை இயக்கப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனையும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த கதை ரஜினி & கமல்ஹாசனை வைத்து இயக்க அவர் உருவாக்கிய கதையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்