Paristamil Navigation Paristamil advert login

லூவரில் கொள்ளையிடப்பட்ட நகைகள் நிச்சயம் மீட்கப்படும்! - ஜனாதிபதி மக்ரோன் சூளுரை!!

லூவரில் கொள்ளையிடப்பட்ட நகைகள் நிச்சயம் மீட்கப்படும்! - ஜனாதிபதி மக்ரோன் சூளுரை!!

9 கார்த்திகை 2025 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 560


லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையிடப்பட்ட நகைகள் நிச்சயமாக மீட்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மக்ரோன் மெக்ஸிகோவுக்கு பயணித்திருந்த வேளையில், அங்கு வைத்தே இதனை அவர் தெரிவித்தார். 88 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள 8 நகளைகள் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டிருந்தது.

”கொள்ளையர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். தலைமறைவாக உள்ள மேலும் சில குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். நகைகள் நிச்சயம் மீட்கப்படும்!” என மக்ரோன் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி லூவர் அருங்காட்சியகத்தில் இருந்த குறித்த நகைகளை ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக கொள்ளையிட்டுக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். அதில் மூன்றாம் நெப்போலிய மன்னனுடைய மனைவி அரசியார் Eugénie இன் தலைக்கவசமும் ஒன்றாகும். அதில் 2,000 ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்