பாலஸ்தீனியர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட இஸ்ரேலின் ரகசிய சிறைச்சாலை
8 கார்த்திகை 2025 சனி 16:10 | பார்வைகள் : 231
காஸாவிலிருந்து கைது செய்யப்பட்ட டசின் கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ஒரு ரகசிய சுரங்க சிறையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது.
போதுமான உணவு வழங்காமல், அவர்களது குடும்பத்தினர் அல்லது வெளி உலகத்தைப் பற்றிய செய்திகளைப் பெறுவதில் இருந்தும் அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.
கைதாகியுள்ள அனைவரும் பயங்கரவாதிகள் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், அதில் செவிலியர் ஒருவரும் பழங்கள் விற்பனை செய்யும் இளம் வயது நபர் ஒருவரும் உட்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் இருந்தே இந்த இருவரும் சுரங்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய தடுப்பு மையங்களில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சித்திரவதைகளுடன் ஒத்துப்போகும் வழக்கமான துன்புறுத்தல் மற்றும் வன்முறையும் அந்த இருவரும் அனுபவிப்பதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.
இஸ்ரேலில் மிகவும் ஆபத்தான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை அடைப்பதற்காக 1980களின் முற்பகுதியில் ரக்ஃபெட் சிறைச்சாலை திறக்கப்பட்டது.
ஆனால் அது மனிதாபிமானமற்றது என்று கூறி சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டது. இந்த நிலையில், ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர் பாலஸ்தீன மக்களுக்காக மட்டும் அந்த சிறைச்சாலை திறக்கப்பட்டது.
1985ல் மூடப்படும் போது 15 கைதிகள் மட்டுமே சிறைவைக்கப்பட்டிருந்தனர். தற்போது சுமார் 100 கைதிகள் என தகவல் கசிந்துள்ளது. தற்போதும் விசாரணை ஏதும் முன்னெடுக்காமல் 1000 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன மக்கள், கடும் சித்திரவதைக்கும், துஸ்பிரயோகத்திற்கும் இரையாகியுள்ளனர்.
பாலஸ்தீன கைதிகளை மோசமாக நடத்துவது நாட்டின் விரிவான பாதுகாப்பு நலன்களை ஆபத்தில் ஆழ்த்துவதாக இஸ்ரேலின் உளவுத்துறை சேவைகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan