சேவையில் இணைக்கப்பட்ட சீனாவின் புதிய போர் கப்பல்
8 கார்த்திகை 2025 சனி 05:02 | பார்வைகள் : 866
சீனாவின் மூன்றாவது மற்றும் மிகவும் மேம்பட்ட விமானம் ஏந்தும் போர் கப்பலான Fujian சமீபத்தில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
ஹைனான் மாகாணத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில் சீன தலைவர் ஜி ஜின்பிங் நேரில் பங்கேற்று கப்பலை ஆய்வு செய்தார்.
Fujian கப்பல், electromagnetic catapults தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்வேறு வகையான விமானங்களை அதிக வேகத்தில் ஏவ முடியும்.
Liaoning மற்றும் Shandong என்ற சீனாவின் முந்தைய இரண்டு விமானக் கப்பல்களுடன் ஒப்பிடும்போது, Fujian அதிக சக்தி வாய்ந்ததாகும். இது உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் விமானக் கப்பலாகும்.
இந்த கப்பல், அதிக எடை கொண்ட ஆயுதங்கள் மற்றும் எரிபொருள் ஏந்தும் விமானங்களை ஏவ முடியும். இதன் மூலம், எதிரி இலக்குகளை நீண்ட தூரத்தில் தாக்கும் திறன் அதிகரிக்கிறது.
அமெரிக்கா மட்டுமே இதே தொழில்நுட்பம் கொண்ட விமானக் கப்பலை வைத்துள்ளது.
ஜி ஜின்பிங், Fujian கப்பலின் மேல் தளத்தில் சென்று அதன் செயல்திறனைப் பற்றி அறிந்தார். அவர், “கட்டளையை பின்பற்றுங்கள், வெற்றி பெற போராடுங்கள்” என வீரர்களிடம் உரையாற்றினார்.
இந்த Fujian கப்பல், சீனாவின் கடல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ராணுவ தாக்கத்தில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan