Paristamil Navigation Paristamil advert login

சலா அப்தெஸ்லாம்: - பயங்கரவாதியின் புதிய நடவடிக்கை!

சலா அப்தெஸ்லாம்: - பயங்கரவாதியின் புதிய நடவடிக்கை!

7 கார்த்திகை 2025 வெள்ளி 17:59 | பார்வைகள் : 523


13 நவம்பர் 2015 தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சலா அப்தெஸ்லாம் (Salah Abdeslam) , அவரது சிறையறையில் கண்டுபிடிக்கப்பட்ட  Clé USB தொடர்பான விசாரணையில் செவ்வாய்க்கிழமை தனிக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய விவரங்கள்:

Vendin-le-Vieil (Pas-de-Calais) சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.

Clé USகணினியில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டமை குறித்த விசாரணையை, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (PNAT) வழக்கைக் கையாள்கிறது

குற்றச்சாட்டுகள்:

சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட கணினியில் அனுமதியில்லா Clé USB பயன்பாடு பயங்கரவாதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணினியில் Clé USB இணைப்புப் பயன்படுத்தப்பட்ட அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறை நிலைமைகள்:

DPS (குறிப்பாகக் குறிப்பிடப்பட்ட கைதி) நிலை
கல்வி கற்க கணினி வாங்க அனுமதி வழங்கப்பட்டது.

தொடர் குற்றங்களால் தொடர்ந்து சிறையறை மாற்றப்பட்டதுடன் அவரது பொருட்களும் சோதனையிடப்பட்டது.

வரலாற்று பின்னணி:
13 நவம்பர் 2015-ல் பாரிஸ் மற்றும் சன்-துனியில், நடந்த தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 10-வது ஆண்டு நினைவு நாளாக அமைய உள்ளது.

இந்நேரத்தில் பயங்கரவாதி சலா அப்தெஸ்லாமின் நடவடிக்கைகள் எச்சரிக்கை நிலையை அதிகரித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்