மாலியில் இருந்து பிரெஞ்சு மக்களை வெளியேற ஆணை!
7 கார்த்திகை 2025 வெள்ளி 16:59 | பார்வைகள் : 4255
மாலியில் பாதுகாப்பு நிலைமை 'மோசமடைந்துள்ளதால்" பிரான்ஸ் அங்குள்ள தனது குடிமக்களை தற்காலிகமாக வெளியேற பரிந்துரைத்துள்ளது.
முக்கிய பரிந்துரைகள்:
தலைநகர் பாமாகோ உட்பட மாலி முழுவதும் பாதுகாப்பு அபாயம் உள்ளது.
வணிக விமானங்கள் மூலம் விரைவாக வெளியேற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிலப்பாதை ஊடான பயணம் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பிரெஞ்சு அரசாங்கம் எச்சரித்துள்ளது.
பின்னணி:
JNIM (அல்-காயிதா இணைப்பு) மற்றும் இஸ்லாமியதேசச பயங்னரவாதக் குழுக்கள்(ISIS) தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன
எரிபொருள் இறக்குமதிக்கு தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர்
2012 முதல் இடம்பெறும் பாதுகாப்பு நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன.
பிரெஞ்சு தூதரகத் தகவல்கள்:
பிரெஞ்சு தூதரகம் திறந்த நிலையில் உள்ளது
4,300 பிரெஞ்சு குடிமக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
பாதுகாப்பு சேவைகள் தொடர்கின்றன
பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் 'மாலிக்கு எந்த காரணத்திற்காகவும் பயணம் செய்வது கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும்' எனவும் எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan