புதிய அணு ஆயுத யுகத்தை கட்டவிழ்த்து விடப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்
7 கார்த்திகை 2025 வெள்ளி 08:35 | பார்வைகள் : 221
அணு ஆயுத சோதனையை தொடங்கவிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்தது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 2025 அக்டோபர் 29-ஆம் திகதி, தென் கொரியாவின் புசானில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கும் முன்னர், “மற்ற நாடுகளுக்கு சமமாக நாங்கள் அணுஆயுத பரிசோதனையை தொடங்குவோம்” என அறிவித்தார்.
இது, 1990-களிலிருந்து தொடர்ந்துவரும் அணுஆயுத பரிசோதனை மீதான உலகளாவிய கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
வாஷிங்டனுக்குத் திரும்பும் வழியில், Air Force One விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் பல ஆண்டுகளாக இதை நிறுத்தியிருந்தோம். ஆனால் மற்ற நாடுகள் பரிசோதனை செய்து கொண்டிருக்கின்றன. எனவே நாங்களும் தொடங்குவது சரியானது” என கூறியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை அணுஆயுதங்களை ஏந்தக்கூடிய ஏவுகணைகளை பரிசோதித்தாலும், அணுஆயுத பரிசோதனையை 1990-களிலிருந்து நிறுத்தியுள்ளன. ஆனால் வடகொரியா அணுஆயுதங்களை நேரடியாக பரிசோதித்துள்ளது.
ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டதும், ரஷ்யா Burevestnik என்ற அணுசக்தியால் இயக்கப்படும் ஏவுகணை மற்றும் Poseidon என்ற ஆழ்கடல் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்தது. இவை அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மீறக்கூடியவை.
இந்த சூழ்நிலை, உலகளாவிய அணுஆயுத சக்திகள் மீண்டும் பரிசோதனையை தொடங்கும் அபாயத்தை உருவாக்குகிறது. இதன் விளைவுகள் உலக அமைதிக்கு பெரும் சவாலாக இருக்கலாம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan