Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

6 கார்த்திகை 2025 வியாழன் 16:45 | பார்வைகள் : 1147


அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானிக்கு (Zohran Mamdani), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அமெரிக்க அரசுடன் மம்தானி "அன்பாக நடந்துகொள்ள வேண்டும்" என்றும், ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் "நிறைய இழக்க நேரிடும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், மம்தானியின் வெற்றிக்குப் பின்னரான பேச்சு குறித்து டிரம்ப் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:

"மம்தானி தனது வெற்றி உரையின் போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று நான் நினைக்கிறேன். அதில் நிச்சயமாக என் மீது கோபமாக இருந்தது. அவர் ஒரு மோசமான தொடக்கத்திற்குச் சென்றுவிட்டார். 

அவர் என்னிடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும். நியூயோர்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்." (முன்னதாக, மம்தானி வெற்றி பெற்றால் மத்திய நிதியுதவிகளைக் குறைப்பேன் என்று டிரம்ப் அச்சுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது).

மம்தானியின் கொள்கைகளைத் தொடர்ந்து 'கம்யூனிசம்' என்று விமர்சித்து வரும் டிரம்ப், தனது பேட்டியில் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தினார்,

"ஆயிரம் ஆண்டுகளாக, கம்யூனிசம் என்ற கருத்து வேலை செய்யவில்லை. இந்த முறை அது வேலை செய்யுமா என்று நான் சந்தேகிக்கிறேன். அது உண்மையில் ஒருபோதும் வேலை செய்யவில்லை. நியூயோர்க்கில் கம்யூனிசத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு விரைவில் புளோரிடா நகரம் அடைக்கலமாக இருக்கும்."

மம்தானி, தனது வெற்றியை அடுத்து ஆற்றிய உரையில் ஜனாதிபதி டிரம்பை நேரடியாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உரையில்,

"நீங்கள் பார்ப்பது எனக்குத் தெரியும் டொனால்ட் டிரம்ப். நான் உங்களுக்காக நான்கு வார்த்தைகள் வைத்திருக்கிறேன், சத்தத்தைக் கூட்டுங்கள் (Turn the volume up)" என்று சவால் விடுத்திருந்தார். மேலும், டிரம்ப் போன்ற கோடீஸ்வரர்கள் வரி ஏய்ப்பு செய்வதை நிறுத்தி, நிலப்பிரபுக்கள் தங்கள் குத்தகைதாரர்களைச் சுரண்டுவதைத் தடுக்க, ஊழல் கலாச்சாரத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம்" என்றும் அவர் சூளுரைத்தார்.

மம்தானியின் வெற்றி, அமெரிக்க அரசியலில் இரு துருவங்களுக்கிடையேயான மோதலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்