2026-ல் குறைந்த விலை MacBook அறிமுகம் செய்ய Apple திட்டம்
6 கார்த்திகை 2025 வியாழன் 15:45 | பார்வைகள் : 131
Apple நிறுவனம், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது முதல் குறைந்த விலை MacBook மொடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
'J700' என குறியிடப்பட்ட இந்த மொடல் தற்போது Apple-ல் சோதனை நிலையில், சப்ளையர்களுடன் ஆரம்ப உற்பத்தி கட்டத்தில் உள்ளது.
இந்த புதிய MacBook, மாணவர்கள், சிறு தொழில்கள் மற்றும் இணைய உலாவல், ஆவண வேலை, லைட் எடிட்டிங் போன்ற தேவைகளுக்கான சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ChromeOS இயங்குதளத்தில் இயங்கும் Chromebooks மற்றும் Windows-ன் அடிப்படை லேப்டாப்புகளுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
விலை: 699 டொலர் (கல்வி தள்ளுபடி உடன்)
சிப்செட்: iPhone-இன் செயலி (M1 MacBook Air-ஐ விட சிறந்த செயல்திறன்)
திரை: MacBook Air-ன் 13.6-inch திரையைவிட சிறியது
வடிவமைப்பு: தற்போதைய MacBook வரிசையிலிருந்து மாறுபட்டது
பேட்டரி ஆயுள்: iPad-ன் keyboard combo-வுடன் ஒப்பிடும்போது சிறந்தது
Apple, Premium சாதனங்களை மட்டுமே விற்பனை செய்த வரலாற்றை மாற்றி, வளர்ந்து வரும் சந்தைகளில் இடம் பிடிக்க இந்த முயற்சியை மேற்கொள்கிறது.
குறைந்த விலை MacBook, மாணவர்களுக்கும் சாதாரண பயனாளர்களுக்கும் ஒரு புதிய விருப்பமாக அமையும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan