Paristamil Navigation Paristamil advert login

2025 மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்- முதலிடத்தில் யார்?

2025 மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்- முதலிடத்தில் யார்?

3 கார்த்திகை 2025 திங்கள் 13:33 | பார்வைகள் : 129


2025 மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனைகள் குறித்து இங்கே காண்போம்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வென்றது.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 98 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் 2022யில் அவுஸ்திரேலியாவின் அலிஸ்ஸா ஹீலி (Alyssa Healy) 509 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

2025 மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்

லௌரா வோல்வார்ட் - 571 ஓட்டங்கள்
ஸ்ம்ரிதி மந்தனா - 434 ஓட்டங்கள்
அஷ்லேய் கார்ட்னர் - 328 ஓட்டங்கள்
பிரதிகா ராவல் - 308 ஓட்டங்கள்
போபே லிட்ச்ஃபீல்டு - 304 ஓட்டங்கள்
அலிஸ்ஸா ஹீலி - 299 ஓட்டங்கள்
ஜெமீமா ரோட்ரிகஸ் - 292 ஓட்டங்கள்
சோபி டிவைன் - 289 ஓட்டங்கள்
ஹீதர் நைட் - 288 ஓட்டங்கள்
நட் சிவர்-பிரண்ட் - 262 ஓட்டங்கள் 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்