Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் 16 பேருக்கு மரண தண்டனை

சீனாவில் 16 பேருக்கு மரண தண்டனை

30 புரட்டாசி 2025 செவ்வாய் 20:29 | பார்வைகள் : 193


மியன்மாரின் கோக்காங் (Kokang) இல் மோசடி நிலையங்களை நடத்தியதன் தொடர்பில் சீனா 16 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. Kokang சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் கும்பல், இணைய மோசடி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. அந்தக் கும்பல் 14 பேரைக் கொலை செய்ததாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் மோசடி நிலையங்கள் அதிகரித்துள்ளன. சீனக் குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அவற்றை நடத்துகின்றனர்.


தாங்கள் கடத்தப்பட்டதாகவும் மோசடி செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்