Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு நஷ்டஈடு வழங்கும் You Tube!

அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்புக்கு நஷ்டஈடு வழங்கும் You Tube!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 09:59 | பார்வைகள் : 191


அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக உள்ள ட்ரம்ப் தோல்வி அடைந்து ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க ட்ரம்ப் மறுத்திருந்தார்.

இதைதொடர்ந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன.


இதில் ட்ரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து ட்ரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இவ்வழக்கில் ட்ரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு வழங்க யூ டியூப் ஒப்புக்கொண்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்