கரூர் துயர சம்பவம்: விஜய் கட்சி மாவட்ட செயலாளர் கைது
30 புரட்டாசி 2025 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 3256
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று கைது செய்யப்பட்டார்.
கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan