Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் கலாசார அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு!!

முன்னாள் கலாசார அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு!!

29 புரட்டாசி 2025 திங்கள் 22:21 | பார்வைகள் : 304


முன்னாள் கலாச்சார அமைச்சர் Rachida Dati மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான வழக்கு 2026 செப்டம்பர் 16 முதல் 28 வரை பரிஸ் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக திங்கட்கிழமை (29/09/2025) அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ரெனால்ட்–நிசான் கூட்டணியிடமிருந்து சுமார் 9 லட்சம் யூரோ பெற்றதாகவும், ஆனால் உண்மையான சேவைகளை வழங்கவில்லை என்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 2026 மார்ச் மாதத்தில் நடைபெறும் பரிஸ் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளராக லெ ரெபப்ளிக்கன் கட்சி அவரை அறிவித்துள்ளது. தாத்தி தனது வக்கீல் பணிகளை நியாயப்படுத்தி எந்த விதமான  நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார். மேலும், விலையுயர்ந்த நகைகள் குறித்த அறிவிக்காத விவகாரத்திலும் அவர் மீது தனி விசாரணை நடைபெற்று வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்