Paristamil Navigation Paristamil advert login

த.வெ.க., பொதுச்செயலர் உட்பட 3 பேர் மீது வழக்கு

த.வெ.க., பொதுச்செயலர் உட்பட 3 பேர் மீது வழக்கு

29 புரட்டாசி 2025 திங்கள் 13:53 | பார்வைகள் : 101


கரூர் சம்பவம் தொடர்பாக தவெக., பொதுச் செயலர் உட்பட 3 பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, கரூர் டவுன் போலீசார், மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன் மீது நேற்று முன்தினம் இரவே, கொலைக்கு சமம் ஆகாத, குற்றமற்ற கொலைக்கான தண்டனை, குற்றமற்ற கொலை முயற்சி, மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், துணை பொதுச்செயலர் நிர்மல்குமார் ஆகிய இரண்டு பேரையும் வழக்கில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்