யாரையும் சந்திக்க விரும்பாத விஜய்

29 புரட்டாசி 2025 திங்கள் 04:53 | பார்வைகள் : 160
த.வெ.க தலைவர் விஜய் வீட்டில், அவரை சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சென்னையில் விஜய் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில், இ.சி.ஆரில் இருந்து, விஜய் வீட்டுக்கு செல்லும், கேசுவரினா டிரைவ் தெருவில் போலீசார் தடுப்பு அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, த.வெ.க., நிர்வாகிகள் சிலர், விஜயை சந்திக்க, சென்னையில் அவரது வீட்டின் முன் கூடினர். அப்போது, விஜயுடன் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், ''விஜய் இப்போது யாரையும் சந்திக்க விரும்பவில்லை. இங்கு கூட்டம் சேர்க்காதீர்கள். இது வேறுவிதமான பிரச்னையை ஏற்படுத்தும்'' என அறிவுறுத்தினர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1