சிறிய படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சி- இரண்டு பெண்கள் உயிரிழப்பு

28 புரட்டாசி 2025 ஞாயிறு 06:54 | பார்வைகள் : 183
ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற போது இரண்டு பெண்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவிற்கு குடியேறுவதற்காக ஆபத்தான ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற போது இரண்டு பெண்கள் உயிரிழந்து இருப்பதாக சனிக்கிழமை பிரான்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவை அடையும் நோக்கத்துடன் சிறிய படகில் 100 பேர் வரை பயணித்த நிலையில் இரண்டு சோமாலிய நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வடக்கு பிரான்ஸின் கடற்கரையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தில் 60 பேர் வரை மீட்கப்பட்டு பொதுப் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மீட்கப்பட்டவர்களில் பலர் குறைந்த உடல் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் பெளலோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சி செய்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1