இஸ்ரேலின் புதிய தாக்குதல் - காஸா மீதான வன்முறை அதிகரிப்பு

28 புரட்டாசி 2025 ஞாயிறு 05:54 | பார்வைகள் : 169
காஸா மீது இஸ்ரேல் மீண்டும் துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், உடனடியாகப் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் காஸாவினுள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய மற்றும் வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில், நுசைராத் அகதிகள் முகாமில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் கொல்லப்பட்டதாக, அங்கு செயல்படும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1