Paristamil Navigation Paristamil advert login

எதுவும் மாறவில்லை என்றால் நிச்சயம் தணிக்கைக்கு செல்வோம்! - பிரதமருக்கு எச்சரிக்கை!!

எதுவும் மாறவில்லை என்றால் நிச்சயம் தணிக்கைக்கு செல்வோம்! - பிரதமருக்கு எச்சரிக்கை!!

28 புரட்டாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 676


ஓய்வூதிய சீர்திருத்தம், வரி அதிகரிப்பு போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்படாமல் வரவுசெலவு சமர்ப்பிக்கப்பட்டால் பிரதமருக்கு எதிராக தணிக்கை கொண்டுவருவோம் என பல்வேறு இடதுசாரிக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

நேற்று சனிக்கிழமை பல்வேறு கட்சியினர் (LFI உட்பட இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகள்) சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தன. அதில் கலந்துகொண்ட Marine Tondelier, Olivier Faure பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் Sébastien Lecornu அரசாங்கத்துக்கு எதிராக ‘நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்போம்!” என தெரிவித்தனர்.

பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம், அது கொண்டுவந்திருந்த வரவுசெலவுத்திட்டம் காரணமாக கவிழ்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ”அந்த வரவுசெலவுத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படாமல், பிரதமரை மட்டும் மாற்றுவதால் பயனில்லை. Sébastien Lecornu  தணிக்கை செய்யப்படுவதைத் தேர்ந்தெடுத்துள்ளார்,"  என பாசுமைக் கட்சித் தலைவர் Marine Tondelier தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்