Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவின் கட்டாய அடையாள அட்டை திட்டத்துக்கு எதிராக மனு

பிரித்தானியாவின் கட்டாய அடையாள அட்டை திட்டத்துக்கு எதிராக மனு

27 புரட்டாசி 2025 சனி 11:59 | பார்வைகள் : 186


பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டை முறை கட்டாயமாக்கப்பட உள்ளது.

உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதின் திட்டத்தின்படி, பிரித்தானியாவில் பணி செய்ய இனி டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது.

உள்துறைச் செயலரின் திட்டத்துக்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.


ஆக, இனி பிரித்தானியாவில் பணி செய்ய விரும்புவோர், புதிதாக பணியில் இணைவோர், இந்த டிஜிட்டல் அடையாள அட்டையை காட்டவேண்டியிருக்கும்.

அதன்மூலம், அந்த நபருக்கு பிரித்தானியாவில் பணி செய்ய அனுமதி உள்ளதா என அதிகாரிகள் உடனடியாக சோதித்து அறிந்துகொள்வார்கள்.

இன்னொரு விடயம், தற்போது பயன்பாட்டில் இருக்கும் காகித அடையாள அட்டையை போலியாகவும் உருவாக்க முடியும் என்பதாலும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு பணி வழங்குவோர், போலியாக தாங்கள் அடையாள அட்டையை சோதித்துவிட்டதாக ஏமாற்றவும்முடியும் என்றும் அரசியல்வாதிகள் கருதுகிறார்கள்.

ஆகவே, டிஜிட்டல் அட்டையால் அந்த மோசடி வேலைகள் தவிர்க்கப்படும் என்பதால், இந்த டிஜிட்டல் அடையாள அட்டை நடைமுறை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்நிலையில், பிரதமரின் கட்டாய அடையாள அட்டை திட்டத்துக்கு பிரித்தானிய மக்களிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பிரித்தானிய அரசின் புகார் மனு இணையதளத்திலேயே பிரதமரின் கட்டாய அடையாள அட்டை திட்டத்துக்கு எதிராக ஒரு புகார் மனு முன்வைக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், மனு முன்வைக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதில் 650,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் புகார் மனு தொடர்பான விதிகள், மனுவில் 10,000 பேர் கையெழுத்திட்டிருந்தாலே அந்த மனுவுக்கு அரசு பதிலளிக்கவேண்டும் என்கின்றன.


100,000 பேர் கையெழுத்திட்டால், அந்த மனு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எழுத்துக்கொள்ளப்படவேண்டும்.

ஆக, தற்போது கட்டாய அடையாள அட்டை திட்டத்துக்கு எதிரான மனுவில் 650,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதால், அது நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்