கனடா எதிர்கொள்ள இருக்கும் வெள்ளி சுனாமி
27 புரட்டாசி 2025 சனி 11:59 | பார்வைகள் : 4177
கனடா, சில்வர் சுனாமி என்னும் வெள்ளி சுனாமி, அல்லது சாம்பல் சுனாமி என்னும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்த Baby boomers என அழைக்கப்படும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முதிர் வயதை அடையும் ஒரு நிலையே மக்கள்தொகை தொடர்பில் வெள்ளி சுனாமி என அழைக்கப்படுகிறது.
அதாவது, இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகில் பிறந்த மக்கள் வேலைக்குச் செல்லத் துவங்கிய நிலையில், தற்போது, அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பணி ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளார்கள்.
கனடாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 2030ஆம் ஆண்டுவாக்கில், இந்த பேபி பூமர்கள் அனைவரும் ஓய்வுபெற்றுவிடுவார்கள்.
விடயம் என்னவென்றால், பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு கனடாவில் போதுமான இளைஞர்கள் இல்லை.
அதைவிட கவலைக்குரிய விடயம் என்னவென்றால், கனடாவில் பிறப்பு வீதமும் குறைந்துவருகிறது.
கனடா, கனேடிய இளைஞர்களின் வேலைக்கும், வீடுகளுக்கும் போட்டிக்கு வருவதாகக் கூறி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் குறியாக உள்ளது.
ஆனால், ஒரு கட்டத்தில் வேலையிலிருக்கும் பணியாளர்கள் அனைவரும் ஓய்வு பெற்றபின், அந்த இடத்துக்கு போதுமான இளைஞர்களும் இல்லாத நிலையில் கனடா என்ன செய்யப்போகிறதோ தெரியாது!
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan