திமுக ஆட்சியே ஒரு வெற்றுக் காகிதம்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

27 புரட்டாசி 2025 சனி 11:46 | பார்வைகள் : 103
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. திமுக ஆட்சியே ஒரு வெற்று காகிதம்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கம்பன் பிறந்த தமிழகம் இன்று கல்வியில் பின்தங்கியுள்ளது. கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, சுய விளம்பரத்திற்காக அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
வெற்று காகிதம்
மாணவர்கள் புத்தகப் பையில் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அவலச் சூழல் நிலவுகிறது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க, உயர்கல்வியில் சில இடங்களை மட்டும் நிரப்பிவிட்டு, நடிகர்களை அழைத்து வந்து அரசு விளம்பரம் தேடுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததாகக் கூறுகிறார்.
இது குறித்து நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறேன்; இதுவரை பதில் இல்லை. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஒரு வெற்று காகிதத்தைக் காட்டி, இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். அவரிடம் இருந்தது வெற்று காகிதம்; அதுபோலவே இந்த அரசும் ஒரு வெற்று காகிதம்தான். இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும்.
எவ்வளவு பணம்…!
மக்கள் திமுக வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகவுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். நானும் சி.வி. சண்முகமும் சந்தித்தது ஒரு சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கும். டிசம்பரில் அதற்கான முடிவு தெரியும். கூட்டணியை மட்டும் வைத்து மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்.
இறுதியாக, வரும் அக்டோபர் 12ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறோம். இதன் முதல் நிகழ்ச்சியில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொள்கிறார். இவ்வாறு நயினார் நாகந்திரன் கூறினார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1