2000 கிலோகிராம் யுரேனியம் வைத்திருக்கும் வட கொரியா- எச்சரிக்கும் தென்கொரியா

26 புரட்டாசி 2025 வெள்ளி 11:02 | பார்வைகள் : 200
வடகொரியா 2000 கிலோகிராம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.
பல ஆண்டுகள் தடைகள் இருந்தபோதிலும், வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இரண்டு டன் (2000 கிலோ கிராம்) அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்திருப்பதாக நம்புவதாக அண்டை நாடான தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான குறிப்பிடத்தக்க அளவு அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா நீண்டகாலமாக வைத்திருப்பதாக அறிவதாக அவர் கூறியுள்ளார்.
இரண்டு டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் சுமார் 47 அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் அவர் தென்கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.