Paristamil Navigation Paristamil advert login

போரை உடனே நிறுத்துங்கள் ரஷ்ய தலைவர்களுக்கு ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

போரை உடனே நிறுத்துங்கள் ரஷ்ய தலைவர்களுக்கு ஜெலென்ஸ்கி  எச்சரிக்கை

25 புரட்டாசி 2025 வியாழன் 16:54 | பார்வைகள் : 225


உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய நாட்டு தலைவர்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி வழங்கப்படும் என்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை ஆக்சியோஸ் நேர்காணலில் இந்த எச்சரிக்கையை ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அதில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நிறுத்தாவிட்டால் ரஷ்யாவின் அதிகார மையங்கள் மீது உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்த தயங்காது என்று ஜெலென்ஸ்கி நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ரஷ்ய தலைவர்கள் போரை உடனடியாக நிறுத்துங்கள் அல்லது பதுங்கு குழிகள் எங்கே உள்ளது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் ரஷ்ய அதிகாரிகளுக்கு அவை விரைவில் தேவைப்படும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவின் பொதுமக்கள் மீது ஒருபோதும் உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தாது என்றும் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

இந்த நேர்காணலில் ஜெலென்ஸ்கி தனது அரசியல் எதிர்காலம் குறித்து முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

போர் நிறைவடைந்த பிறகு தன்னுடைய ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும், போரை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமே தனது இலக்கு என்றும் ஜெலென்ஸ்கி பேசியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்