Paristamil Navigation Paristamil advert login

காசா நிவாரண கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

காசா நிவாரண கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

25 புரட்டாசி 2025 வியாழன் 15:54 | பார்வைகள் : 177


காசாவிற்கான நிவாரண பொருள் கப்பலை பாதுகாக்க இத்தாலி தனது இரண்டாவது கடற்படை கப்பலை அனுப்பியுள்ளது.

காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை பாதுகாக்க இத்தாலி தனது இரண்டாவது கடற்படை கப்பலை அனுப்பி வைத்துள்ளது.

இத்தாலி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஆற்றிய உரையின் போது அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதில், நிவாரண பொருட்களை பாதுகாக்க நாங்கள் ஒரு கப்பலை அனுப்பியுள்ளோம், மற்றொன்றும் வழியில் உள்ளது, எந்தவொரு பதற்றமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடல் பிராந்தியத்தில் குளோபல் சுமுத் கப்பல் படை(GSF) தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு சில மணி நேரத்தில் இத்தாலி தனது முதல் கப்பலை அனுப்பியது.

GSF வழங்கிய கூடுதல் தகவலில், கிரேக்க தீவான காவ்டோஸிலிருந்து 56 கி.மீ தொலைவில் இஸ்ரேலிய படைகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.

தாக்கப்பட்ட கப்பலில், பல சட்ட வல்லுநர்களும், கிரெட்டா துன்பெர்க் போன்ற சமூக ஆர்வலர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்