Paristamil Navigation Paristamil advert login

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

25 புரட்டாசி 2025 வியாழன் 10:53 | பார்வைகள் : 158


தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.2-ஆக பதிவானது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கம் பக்கத்து மாகாணங்களிலும் உணரப்பட்டது.

இதனால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.


வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்