பாங்காக்கில் திடீரென ஏற்பட்ட பயங்கர பள்ளம்

24 புரட்டாசி 2025 புதன் 16:51 | பார்வைகள் : 169
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் திடீரென ஏற்பட்ட பயங்கர பள்ளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை பாங்காக்கில் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் திடீரென பிரம்மாண்ட பள்ளம் ஒன்று ஏற்பட்டு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றை விழுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் பள்ளம் காரணமாக அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுரங்கப்பாதை அமைக்கும் இடத்திற்கு மேலே ஏற்பட்டுள்ள இந்த ராட்சத பள்ளம் குறித்து அதிகாரிகள் வழங்கிய தகவல் படி, இந்த பள்ளம் 20 மீட்டர் ஆழமும், 30 மீட்டர் அகலம் கொண்டது என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், மூன்று வாகனங்கள் மட்டும் சேதமடைந்து இருப்பதாக பாங்காக் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சாலைக்கு கீழே உள்ள சுரங்கம் இடிந்து விழுந்ததால், அதன் மேல் பகுதியில் உள்ள மண் சரிந்து இந்த பள்ளம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.