தைவானை சூறையாடிய ராகசா சூப்பர் புயல்- 700,000 பேர் பாதிப்பு

24 புரட்டாசி 2025 புதன் 15:51 | பார்வைகள் : 204
தைவானை ராகசா என்று பெயரிடப்பட்ட பிரம்மாண்ட புயல் தாக்கியதில் கடும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த புயலாக அறிவிக்கப்பட்ட ராகசா புயல் தைவானை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இதில் தைவானின் பிரபலமான சுற்றுலா தளமான ஹுவாலியன் மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
மேலும் புயல் தாக்கியதில் இந்த மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு தைவான் பகுதியில் பெய்த 70 செ.மீ மழை காரணமாக சுற்றியுள்ள பள்ளிகள், வணிக கட்டிடங்கள் மூடப்பட்டு இருப்பதோடு, முக்கிய விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தடுப்பணை உடைந்ததில் குவாங்ஃபு நகரம் மூழ்கியதோடு 129 பேர் இதில் காணாமல் போயுள்ளனர்.
ராகசா புயல் தைவான் மட்டுமல்லாமல் பிலிப்பைன்ஸையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புயலால் வடக்கு லுசோன் பகுதியில் 4 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 700,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சக்தி வாய்ந்த ராகசா புயல் தற்போது சீனா மற்றும் ஹாங்காங்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.