கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்..!
24 புரட்டாசி 2025 புதன் 10:31 | பார்வைகள் : 3836
வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை சமீபத்தில் கொலம்பியாவில் ஒரு சட்டவிரோத சுரங்கத்தில் ஏழு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 9 நாட்கள் போராடி உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்புக் குழு மீட்டெடுத்தது.
இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்களில் மீண்டும் தங்கச் சுரங்கம் இடிந்து தொழிலாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan