ரஜினியுடன் மோதும் சூர்யா….?
22 புரட்டாசி 2025 திங்கள் 17:39 | பார்வைகள் : 2197
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்திலும் அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர் திரைப்படம்’ இமாலய வெற்றி பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகம் ரூ.1000 கோடியை வசூல் செய்துவிடும் என பலரும் நம்புகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது.
அதேசமயம் சூர்யாவின் 45வது படமாக ‘கருப்பு’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. ஆனால் படக்குழு இதுவரை இதன் ரிலீஸ் குறித்து அறிவிக்கவில்லை. இது தவிர இந்த படம் 2026 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வரும் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்நிலையில் ரஜினி மற்றும் சூர்யாவின் படங்கள் ஒரே மாதத்தில் களமிறங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அதேபோல் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் திரைக்கு வர இருக்கிறதாம். அதன்படி ஜெயிலர் 2, கருப்பு ஆகிய இரண்டு படங்களில் ஏதேனும் ஒன்று ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் எனவும், மற்றொன்று ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan