Paristamil Navigation Paristamil advert login

சீனா அறிமுகப்படுத்திய புதிய விசா!

சீனா அறிமுகப்படுத்திய புதிய விசா!

22 புரட்டாசி 2025 திங்கள் 08:57 | பார்வைகள் : 191


அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (88 இலட்சம் ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசாங்கம் உத்தரவிட்டது.

அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீடிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று டிரம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசாவை  சீனா அறிமுகம் செய்துள்ளது.

அக்டோபர் 1 முதல் K விசா நடைமுறைக்கு வருகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்