பரிஸ் : இளம் பெண் பாலியல் வல்லுறவு!!

22 புரட்டாசி 2025 திங்கள் 09:09 | பார்வைகள் : 494
மதுபான விடுதி ஊழியர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
19 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் செப்டம்பர் 20 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவல்துறையினரை அழைத்துள்ளார். பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள (Gare de Lyon நிலையத்துக்கு அருகே) மதுபான விடுதி ஒன்றின் கூரையில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டனர். குறித்த இளம் பெண் அரை நிர்வாணமாகவும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான நிலையிலும் இருந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.
அதே மதுபான விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இரண்டாவது நபர் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 2 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.