Paristamil Navigation Paristamil advert login

புதுமை படைக்க தாயகம் திரும்புங்கள்; இந்தியர்களுக்கு பியூஷ் கோயல் அழைப்பு!

புதுமை படைக்க தாயகம் திரும்புங்கள்; இந்தியர்களுக்கு பியூஷ் கோயல் அழைப்பு!

22 புரட்டாசி 2025 திங்கள் 10:48 | பார்வைகள் : 126


இந்திய திறமைசாலிகளை பார்த்து பயம் வந்துவிட்டது. இதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. நாம் தான் வெற்றியாளர்கள். புதுமைகளை படைக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும்,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இது, இந்தியர்களை பணி அமர்த்திய நிறுவனங்களுக்கு அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது. இது, அங்கு செல்ல திட்டமிட்டுள்ள மற்றும் விடுமுறைக்கு சென்றுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: உலகில் உள்ள பல நாடுகள் இந்தியாவுடன் வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றன. அந்நடுகள் இந்தியாவுடன் வர்த்தகத்தையும், உறவையும் அதிகரிக்க விரும்புகின்றன. அவர்கள் நமது திறமைசாலிகளை பார்த்து பயப்படுகின்றனர். எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

இந்திய திறமைசாலிகள் தாயகம் திரும்பி புதுமைகளை படைக்க வேண்டும். நாம் தான் வெற்றியாளர்கள். முதல் காலாண்டில் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கிறது. இது அனைத்து பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளையும் தாண்டியது. இந்த பொருளாதார வளர்ச்சி 2047 வரை தொடரும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்