ஹெச்1 பி விசா கட்டண குழப்பங்கள்: இந்தியர்களுக்காக அவசர உதவி எண்களை வெளியிட்ட தூதரகம்
21 புரட்டாசி 2025 ஞாயிறு 10:35 | பார்வைகள் : 1286
ஹெச்1 பி விசா கட்டண உயர்வு தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் அவசர தொலைபேசி உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது,
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஹெச் 1 பி விசா கட்டண உயர்வு ( ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சம்) இன்று (செப்.21) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பற்றி பல்வேறு சந்தேகங்கள்,முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
இந் நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கட்டண உயர்வு மற்றும் அதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் அவசர தொலைபேசி உதவி எண்களை அறிவித்துள்ளது,
இந்த விபரத்தை இந்திய தூதரகம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் +1-202-550-9931 என்ற செல்போன் எண்ணை (மற்றும் WhatsApp) அழைக்கலாம். உடனடி அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் மட்டுமே இந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டும், வழக்கமான தூதரக விசாரணைகளுக்கு அழைக்க வேண்டாம்.
இவ்வாறு இந்திய தூதரகம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா திரும்பும் இந்தியர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அனைத்து தூதரகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan