சூடான் மசூதியில் ட்ரோன் தாக்குதல் - 78 பேர் பலி!

20 புரட்டாசி 2025 சனி 17:51 | பார்வைகள் : 268
சூடானின் டார்பர் பகுதியில் உள்ள மசூதியொன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏல் - ஃபாஷர் நகரில் வெள்ளிக்கிழமை (19) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் அந்தக் குழு அதற்குப் பொறுப்பேற்கவில்லை.
RSF மற்றும் இராணுவம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளன.
டார்பூரில் உள்ள கடைசி இராணுவ கோட்டையும், சண்டையில் சிக்கியுள்ள 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் தாயகமுமான எல்-ஃபாஷரின் முழுமையான கட்டுப்பாட்டைக் கைப்பற்ற துணை ராணுவத்தினர் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
காலை தொழுகையின் போது ட்ரோன் தாக்கியதில் பலர் உடனடியாகக் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர் ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு; தெரிவித்துள்ளார்.
78 பேர் உயிரிழந்துள்ளதுடன்; சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அந்தநாட்டு மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நகரின் மேற்கில் அமைந்துள்ள மசூதிக்கு அருகில் போர்வைகளில் சுற்றப்பட்ட சுமார் 30 உடல்களைக் காட்டும் காட்சிகளை சர்வதேச ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.