பர்மிங்காம் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு
20 புரட்டாசி 2025 சனி 17:51 | பார்வைகள் : 1219
பிரித்தானியாவின் பர்மிங்காம் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பர்மிங்காம் இரவு விடுதியில் சனிக்கிழமை நடந்த திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் Mango என்ற இரவு விடுதியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை வழங்கிய தகவல் படி, 3 பேர் லேசான காயமடைந்து இருப்பதாகவும், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், 20 மற்றும் 30 வயதுக்கு உட்பட்ட 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இவர்களை M6 நெடுஞ்சாலையில் வார்விக்ஷைரில் மடக்கி பிடித்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள், அல்லது காரின் டேஷ்கேம் காட்சிகள் வைத்து இருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு தலைமை ஆய்வாளர் மைக்கேல் கிளார்க் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan