Paristamil Navigation Paristamil advert login

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்…

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்…

19 புரட்டாசி 2025 வெள்ளி 10:23 | பார்வைகள் : 1108


நடிகர் ரோபோ சங்கர் நேற்று(செப்., 18) இரவு காலமானார். சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜொலித்த ரோபோ சங்கர், 46. சினிமாவிலும் காமெடி நடிகராக உயர்ந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், மஞ்சள்காமாலை நோயால் பாதித்து அதிலிருந்து மீண்டு வந்தார். மீண்டும் படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் சில தினங்களாக உணவுக்குழாய் மற்றும் குடல் பிரச்னையால் பாதித்த இவர், நேற்று இரவு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரோபோ சங்கர் உடல் அஞ்சலிக்காக சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணிக்கு மேல் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்