அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 3 பொலிஸார் உயிரிழிப்பு

18 புரட்டாசி 2025 வியாழன் 20:18 | பார்வைகள் : 318
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரியும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலடெல்பியாவிலிருந்து கிழக்கே சுமார் 100 மைல் (160 கிலோமீற்றர்) தொலைவில் உள்ள யார்க் கௌண்டியில் உள்ள வடக்கு கோடோரஸ் டௌன்ஷிப்பின் கிராமப்புறத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.