கணவாய் கிரேவி.

18 புரட்டாசி 2025 வியாழன் 16:48 | பார்வைகள் : 108
கணவாயில் அசத்தும் சுவையில் கேரளா ஸ்டைலில் கணவாய் கிரேவி.. ரைஸ்க்கு பெஸ்ட் காம்பினேஷன் இந்த கிரேவியா தான் இருக்கும்.
தேவையான பொருட்கள்;-கணவாய், எண்ணெய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, வரமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, தேங்காய், சீரகம், கருவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, மிளகு பொடி.
செய்முறை;-கணவாய் சுத்தம் செய்து சிறிய துண்டாக வெட்டிக் கொள்ளவும். வாணலில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.
வதக்கி பொன்னிரமாக மாறிய பின் கிராம்பு, ஏலக்காய், பட்டை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின்பு நறுக்கி தக்காளி, கொத்தமல்லி மற்றும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து மசாலா எடுத்துக் கொள்ளவும்.
இதன்பின் வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அரைத்த மசாலாவையும் சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
இதில் துண்டு துண்டாக வெட்டி வைத்த கணவாய் போட்டு நன்றாக 15 நிமிடம் கொதிக்க விட்டு, பிறகு கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து எடுத்தால் சூப்பரான சுவையில் கேரளா ஸ்டைலில் கணவாய் கிரேவி ரெடி.