துனீசியா நாட்டுக்கு 200 பேருந்துகளை நன்கொடையாக வழங்கும் சுவிஸ்
18 புரட்டாசி 2025 வியாழன் 14:12 | பார்வைகள் : 1948
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவுக்கு 200 பேருந்துகளை நன்கொடையாக வழங்க உள்ளது.
விடயம் என்னவென்றால், ஜெனீவா போக்குவரத்து நிறுவனமான TPG, மின்சார பேருந்துகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஆகவே, ஏற்கனவே தன்னிடமிருக்கும் thermal வகை பேருந்துகளை துனிசியாவுக்கு கொடுக்க TPG நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜனவரி மாதம் துவங்கி, வரும் நான்கு ஆண்டுகளில், சுமார் 200 பேருந்துகளை துனீசியாவுக்கு வழங்கும் வகையில் ஜெனீவா போக்குவரத்து நிறுவனமான TPGம், துனிசியா போக்குவரத்து நிறுவனமான Transtuவும் நேற்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan